அவன் வருகைகாக நன் காத்திருந்தேன்..என்றும் போல்!
என் இனிமையான சந்தோஷ நினைவுகளை அவனிடம் பகிர்ந்துகொள்ள...
அவனும் நானும் சேர்ந்து எல்லாம் ரசிப்பது ஒரு பொழுதுபோக்கு..
துக்கம் வரும் சமயம் ..என் கண்ணீர் துளிகளை அவன் துடைக்கமாட்டான்
அப்படி செய்யாமல் என்னை அவன் தோள் மீது சாய்த்துகொள்வான்..
"நான் தானே!..யாரிடம் வெட்கம்?..இன்னும் அழு" என்பான்!
என்றும் போல் அன்றும், அவன் வந்தான்.."ஏன் இன்றைக்கு தாமதமாய் அழைத்தாய்?" என்றான்
"என்னமோ தெரியவில்லை. நீ வந்தால் ஒரு நிம்மதி" என்றேன் நான். அவனும் ஆமோதித்தான்
நேரம் கழிந்தது..எங்கே ...சென்று விடுவானோ என்ற ஏக்கம் எனக்கு..
நான் எங்கும் போகமாட்டேன்..உன்னுள்ளே உறைந்து போவேன்..என்பதுபோல் கண் சிமிட்டினான்!
நீ கூப்பிடும் தருணம் வந்து நிற்பேன் என்று உருதிமொழிந்தான்..
"உன்னை நான் எப்பவும்போல் தனிமை என்றே அழைக்கட்டுமா?" என்றேன் புன்முறுவலுடன்!
ஆமோதிததவாறு கை கோர்த்து கொண்டான்!
No comments:
Post a Comment